பற்களில் மஞ்சள் கறை படிவது ஏன்?
பற்களில் ஏற்படும் கறைகள் இரண்டு வகைப்படும். காபி, டீ, புகையிலை போன்றவற்றால் ஏற்படும் கறைகள் வெளிப்புறத்தில் மட்டும் இருக்கும்.
பல் டாக்டர் மேற்பார்வையில் 'பிளீச்சிங்' சிகிச்சை முறையில் பற்களை வெண்மையாக்கலாம்.
இம்முறையில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பாதுகாப்பானவையே.
குடிதண்ணீர், வாழும் இடம் மற்றும் வேறு சில உடல் உபாதைகளில் பற்கள் உள்புறத்தில் இருந்து மஞ்சளாக இருக்கும். இதற்கு 'பிளீச்சிங்' சரியான பலன் தராது.
இதற்கு பற்களின் மேல் 'வெனீயர்' அல்லது 'கேப்' அமைப்பது போன்றவற்றால் வெண்மை பற்களை பெறலாம்.
சிகிச்சைக்கு முன்னால் பற்களின் மஞ்சள் தன்மைக்கான காரணத்தை ஆராய்ந்து அதற்கேற்றவாறு வெண்மையாக்க வேண்டும்.
இந்த சிகிச்சை முறையை அனைத்து வயதினரும் செய்து கொள்ளலாம்.
சிகிச்சைக்கு பிறகு சரியான பராமரிப்பின் மூலம் நீண்ட காலம் வெண்மையான பற்களை பெறலாம்.