சாட் ஜிபிடி-யை மிஞ்சுமா கூகுளின் பார்ட்?

மனிதனை மிஞ்சும் வகையில் அதிவேகமாக வளர்ந்து வருவது ஏ.ஐ. தொழில்நுட்பமே.

சமீப காலத்தில் சாட் ஜிபிடி என்று ஓபன் ஏஐ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஓர் ஏஐ மக்களிடையே புழக்கத்திற்கு வந்துள்ளது.

பயன்பாட்டிற்கு வந்த ஒரு வாரத்திலேயே கிட்டத்தட்ட பத்து லட்சம் மக்களை ஈர்த்துள்ளது.

கூகுள் நிறுவனம் பார்ட் என்ற ஏ ஐ செயலியை பி.ப்., 7ல் அறிமுகம் செய்துள்ளது.

சாட் ஜிபிடி-யை அறிமுகப்படுத்திய பிறகு ஏ.ஐ. உற்பத்தி செய்யும் கட்டுரை உள்ளடக்கத்தை மக்கள் அதிகமாக தேடத் தொடங்கியுள்ளனர்.

கூகுள் நிறுவனம் இதனை ஈடு செய்யும் வகையில் அதனுடைய லேம்டா என்ற சாட்பாட் சாப்ட்வேரை உபயோகித்து இந்த ஏஐ-யை உருவாக்கியுள்ளது.

இந்த சாப்ட்வேர், மருந்துகளின் கட்டமைப்பைப் பற்றி அறிய அறிவியல் தரவுத்தளங்களை ஸ்கேன் செய்வதில் பெரும் உதவிகரமாக உள்ளது.