'அட..!' சொல்ல வைக்கும் ஆச்சரியத் தகவல்கள் !
சோம்பேறி விலங்குகளான பாண்டா கரடிகள் நன்கு சாப்பிட்டுவிட்டு உறங்கிவிடும். ஒருநாளில் 25 கிலோ மூங்கில்களைச் சாப்பிடுவதால் செரிமானம் மிகக் கடினமாகிறது; முக்கால்பங்கு மலமாக வெளியேறிவிடும்.
1860ல் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வேக்வம் கிளீனர்கள் அதிக எடை கொண்ட இயந்திரங்களாக இருந்ததால், குதிரை வண்டியில் இழுத்துச் சென்று வீடு வீடாக சுத்தம் செய்யப்பட்டது.
சைக்கோ, பேர்ட்ஸ் போன்ற ஹாலிவுட் ஹாரர் பட இயக்குநர் ஆல்ஃபர்டு ஹிட்ச்காக்; இவருக்கு முட்டையின் மஞ்சள் கருவைக் கண்டால் பயம் என்பதால் தன் வாழ்நாளில் முட்டைகள் சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டார்.
அமெரிக்காவில் யாருக்காவது அதிகம் வியர்த்து வடிந்தால் 'ஏன் பன்றிபோல உனக்கு வியர்க்கிறது?' என கேலியாக விமர்சிப்பது வழக்கம். ஆனால் உண்மையில் பன்றிகளுக்கு வியர்வை நுண்துளைகள் கிடையாது.
18ம் நூற்றாண்டுக்கு முன்னர் குடைகள் பெண்களின் பேஷன் ஆக்சஸரிக்களாகப் பார்க்கப்பட்டன. இவற்றை பொது இடங்களுக்குச் செல்லும் பெண்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.
டால்பின்களை வேட்டையாட கடல் திமிங்கலங்கள் அவ்வப்போது படையெடுப்பதுண்டு. எனவே இவை உறங்கும்போது ஒரு கண்ணைத் திறந்து மற்றொரு கண்ணை மூடியபடியே உறங்கும்.
சிலந்தி வலைகளில் வைட்டமின் கே, பூஞ்சைத்தொற்று மற்றும் ஒவ்வாமையை எதிர்த்தல் போன்ற மருத்துவ குணங்கள் உள்ளதால், கிரீஸ் நாட்டில் நோயாளிகளுக்கு பேண்டேஜ்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சீன நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கும்போது நீதிபதிகளின் முகபாவங்களை யாரும் கவனிக்கக் கூடாது என்பதற்காக, முதன்முதலில் கூலிங் கிளாஸ் கண்டுபிடிக்கப்பட்டது.