டிஜிட்டலுக்கு அடிமையாகும் இளம் வயதினரும், பாதிப்புகளும் !
குழந்தைகள், இளம் வயதினரிடையே டிஜிட்டலுக்கு அடிமையாதல் மற்றும் திரை தொடர்பான மனநல சவால்கள் அதிகரித்து வருவதாக பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதில், ஸ்மார்ட் போன்கள், சமூக ஊடகங்கள், கேமிங் மற்றும் ஆன்லைன் தளங்களில் அதிகப்படியான ஈடுபாடு ஆகிய இந்த போக்கு ஆபத்தானது.
இது அவர்களின் ஆரோக்கியம், கற்றல் விளைவுகள் மற்றும் நீண்டகால பொருளாதார உற்பத்தித் திறனில் அளவிடக்கூடிய பாதிப்பை ஏற்படுத்த துவங்கியுள்ளது.
டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆன்லைன் செயல்பாடுகளை தொடர்ந்து, அதிகமாக பயன்படுத்துவதால் டிஜிட்டலுக்கு அடிமையாவதுடன் மன உளைச்சல், செயல்பாட்டு குறைபாடு ஏற்படுகிறது.
இத்தகைய நடத்தையானது கவனக்குறைவு, தூக்கமின்மை, பதற்றம் மற்றும் கல்வி அல்லது பணியிடங்களில் செயல்திறன் குறைதல் போன்ற வடிவங்களில் அதிகரித்து வருகிறது.
ஆன்லைன் செலவு, கேமிங் மற்றும் சைபர் மோசடியால் நிதி இழப்பு ஏற்படக்கூடும்.
மேலும், வேலைவாய்ப்புக் குறைவு, குறைந்த உற்பத்தி திறன், வாழ்நாள் சேமிப்பு ஆகியைவற்றில் சரிவு ஏற்படுவது என மறைமுக இழப்புகளும் ஏற்படும்.
வலுக்கட்டாயமாக டிஜிட்டலை பயன்படுத்துவதால், மாணவர்கள், இணையவழி துன்புறுத்தல் ஆகியவற்றால் பாதிக்கப்பட வேண்டியிருக்கும்.
அதனால் பதற்றம், அழுத்தம், நெருக்கடி மற்றும் தூக்க பிரச்னை ஆகியவையும் ஏற்படும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.