ஆரோக்கியத்துக்கு கைக்கொடுக்கும் '5ஜி'
பாரம்பரியமான ஒருசில மசாலாப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சஞ்சீவி மூலிகைகளாகும். இதில், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் 5ஜிக்கு முக்கிய இடம் உள்ளது.
ஆஹா... உணவுக்கும் 5ஜி நெட்வொர்க்குக்கும் என்ன தொடர்பு என சட்டென்று நினைக்கத் தோன்றுகிறதா? இது உங்களுக்கு நன்றாகத் தெரிந்த பாரம்பரிய உணவுப் பொருட்களை உள்ளடக்கியதே.
உணவின் 5ஜிகள் இதோ... பூண்டு (Garlic), பச்சை மிளகாய் (Green chili), நெல்லிக்காய் (Gooseberry / amla), இஞ்சி (Ginger), தேநீர்/ கிரீன் டீ (Green tea).
சமையல் அறையில் பயன்படுத்தப்படும் பூண்டு மூலிகை பொருட்களில் முக்கியமான ஒன்றாகும். இது கொல்ஸ்ட்ரால், ரத்த அழுத்தம் உட்பட பல்வேறு பாதிப்புகளை தவிர்க்க உதவுகிறது.
வண்ணமயமான காரமும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பச்சை மிளகாயில், அதிகளவில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.
உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துதல், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்தல், கொலஸ்ட்ராலை சமன் செய்தல், செரிமானத்துக்கு உதவுதல் உட்பட பல்வேறு நன்மைகளை நெல்லிக்காய் அள்ளித்தருகிறது.
எல்.டி.எல்., என்ற கெட்டக் கொழுப்புகளை கரைத்து, உடல் எடையை சமநிலையில் வைக்க இஞ்சி உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதேவேளையில் அளவாகப் பயன்படுத்த வேண்டும்.
உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பதுடன், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது இந்த கிரீன் டீ. டைப் 2 நீரிழிவு பாதிப்பை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.