ஃபோலிக் அமிலம் நிறைந்த 10 உணவுகள்
தினமும் முட்டைகளை சேர்ப்பதால் ஃபோலேட் சத்துகள் கிடைக்கும். இதில், புரதம், செலினியம், வைட்டமின் பி12, லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
அசைவப்பிரியராக இருந்தால் கல்லீரலை முயற்சிக்கலாம். இது செலினியத்தின் சிறந்த ஆதாரமாகும். இதில் ட்ரான்ஸ்ஃபேட் மற்றும் கொழுப்பு உள்ளதால் மிதமான அளவில் சாப்பிடுவது நல்லது.
அவகேடோ பழம் அனைவரும் விரும்பி உட்கொள்ளக்கூடியது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.
பீன்ஸ், பட்டாணி, பருப்பு வகைகள் ஃபோலேட்டின் சிறந்த மூலமாகும். பருப்புகளில் புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
ப்ரோக்கோலி... தினமும் தேவையான ஃபோலேட் ஒரு கப் அளவில் 14% இதில் கிடைக்கும். இதில் வைட்டமின் ஏ மற்றும் கே உள்ளது.
உலர் விதைகள் கொட்டைகள்... ஆளிவிதைகள், சூரியகாந்தி விதைகள் , பாதாம் போன்றவற்றில் ஃபோலேட் நிறைந்துள்ளதால் சால்ட்டில் சேர்த்து உட்கொள்ளலாம்.
1 கப் மசித்த வாழைப்பழத்தில் 45 mcg ஃபோலேட் உள்ளது. தினசரி வைட்டமினில் 11% கிடைக்கும். வைட்டமின் பி6 ன் ஆதாரமாகவும் உள்ளது.
தக்காளியில் நிறைவுற்ற கொழுப்பு, சோடியம் உள்ளது. மேலும் பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் கரோட்டினாய்டுகளின் ஆதாரமாகும்.
ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் ஃபோலேட் சத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஊட்டச்சத்துகள் நிறைந்த பீட்ரூட் ஃபோலேட்டின் சிறந்த ஆதாரமாகும்.