பலா விதை துவையல் ரெசிபி இதோ
தேவையான பொருட்கள்: பலா விதை - 250 கிராம், காய்ந்த மிளகாய் - 6, பச்சை மிளகாய் - 2,
பெருங்காயம், தேங்காய், உப்பு, புளி, தண்ணீர் - தேவையான அளவு.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானவுடன், தோல் நீக்கிய பலாவிதைகளை போட்டு நன்கு வறுக்கவும்.
பின், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கிள்ளிய பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.
இந்த கலவை ஆறியதும் உப்பு, புளி, துருவிய தேங்காய், தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
இப்போது சத்துகள் நிறைந்த, வித்தியாசமான சுவையுள்ள, பலா விதை துவையல் ரெடி. சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்.