11 நாள் கடுமையான விரதமும்; மோடியின் புனித பயணமும்!
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
கருவறையில் பகவான் பால ராமர் விக்ரஹத்தை பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்கிறார்.
இந்த புனிதமான பணிக்காக, கடந்த 12ம் தேதி கடுமையான விரதத்தை துவங்கினார்.
மனதையும் உடலையும் முழுமையாக தூய்மைப்படுத்துவதற்கான 11 நாள் விரதம் அது.
எளிய உணவு வகைகளை உட்கொள்வது, தரையில் போர்வை விரித்து படுப்பது, இளநீர் பருகுவது உள்ளிட்ட சாஸ்திரங்களை அவர் விரத நாட்களில் கடைப்பிடிக்கிறார்.
11 நாள் விரத காலத்தில் ராமாயணத்துடன் தொடர்புடைய முக்கிய கோவில்களுக்கும், பிரதமர் மோடி ஆன்மிக பயணம் மேற்கொண்டார்.
ராமர் தீர்த்தமாடிய தீர்த்தங்களில் பிரதமர் மோடி நீராடியதும், அங்கிருந்து புனித நீரை அயோத்திக்கு கொண்டு செல்வதும், அயோத்திக்கும் ராமேஸ்வரத்துக்குமான ஆன்மிக தொடர்பை வலுப்படுத்தும் வகையில் இருக்கிறது.