லோக்சபா தேர்தலில் முதல் முறை வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை தொலைத்தவர்கள வாக்காளர் அடையாள அட்டை இல்லாமலேயே வாக்களிக்க முடியும்.
வாக்காளர் அடையாள அட்டை உங்களிடம் இல்லாவிட்டாலும் கீழ்கண்ட 12 ஆவணங்கள் இருந்தால் வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆதார் கார்டு
பான் கார்டு
ஓட்டுநர் உரிமம்
பாஸ்போர்ட்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி அடையாள அட்டை
மருத்துவ காப்பீட்டு அட்டை
வங்கி/அஞ்சலக கணக்கு புத்தகங்கள்
தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை
புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொதுநிறுவனங்களில் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை
நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை
இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை