அயோத்தியில் ஒரே நாளில் 2.5 லட்சம் பக்தர்கள் ராமரை தரிசித்தனர்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 22ம் தேதி விமரிசையாக நடந்தது.
இதற்காக அயோத்தி நகரே விழாக்கோலம் பூண்டது.
விமரிசையாக நடந்தேறிய விழாவில் பிரதமர் மோடி பால ராமர் சிலையை பிராண பிரதிஷ்டை செய்தார்.
தொடர்ந்து நேற்று (23ம் தேதி) முதல் பொதுமக்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று (23-ம் தேதி) ஒரு நாளில் மட்டும் 2.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்து வரும் உ.பி. மாநில காவல்துறை டி.ஜி.பி., தலைமை செயலர் ஆகியோர் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.