ஆஸ்கருக்கு செல்லும் ‛2018 மலையாள திரைப்படம்

அடுத்தாண்டு நடக்க உள்ள ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் 2018 திரைப்படம் தேர்வாகி உள்ளது - இந்திய திரைப்பட கூட்டமைப்பு

திரையுலக கலைஞர்களுக்கு மிகப் பெரிய கனவு ஆஸ்கர்.

உலகளவில் சினிமாவில் உயர்ந்த கவுரவமாக பார்க்கப்படும் இந்த விருதுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து படங்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படும்.

அந்தவகையில் 2024ல் நடக்க உள்ள ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் மயைாளத்தில் வெளியான 2018 திரைப்படம் தேர்வாகி உள்ளது.

கேரளாவில் பெய்த பெரும் மழை வெள்ளத்தை அடிப்படையாக வைத்து வெளியான இந்த படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கி இருந்தார்.

டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிப் அலி, வினீத் சினிவாசன், லால், நரேன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான இந்த படம் ரூ.200 கோடி வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.