50 கேஜி தாஜ்மஹால்… சமந்தாவின் பிட்னஸ் ஸ்டோரி!

தினமும் காலையில் வொர்க் அவுட் செய்வதால் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் நீங்கி தொப்பை விரைவில் குறையும்.

மேலும் உங்கள் எடையை அதிக அளவில் குறைக்க செய்வதோடு, வளர்சிதை மாற்றதை கட்டுக்குள் வைத்து கொள்ள உதவும்.

சமந்தாவும் புத்தம் புது காலை பொழுதை, உடற்பயிற்சி மூலம் சிறந்த காலை வேளையாக மாற்றியதாக இன்ஸ்டாவில் கூறிவுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் தன்னுடைய உடல் எடை 50.1 கிலோ எனவும், 36 வயதில் 23 வயதிற்கான வளர்சிதை மாற்ற வயது (Metabolic age) உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் சமந்தா.

அதோடு தான் உடற்பயிற்சி செய்யும் இடத்தில் உள்ள மரம், பறவை, குரங்கு மற்றும் ஏரி அமைந்த இயற்கை சூழலில் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

குஷி படத்திற்கு பிறகு சில மாதங்கள் பிரேக் எடுத்திருந்தார் சமந்தா.

சிகிச்சை, உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றின் மூலம் முழு உடல் தகுதி பெற்று மீண்டும் புதிய படங்களில் நடிக்க முயற்சி எடுத்து வருகிறார்.

தற்போது சிட்டாடல் வெப் தொடரிலும் உற்சாகமாக நடித்து வருகிறார்.