220 மருந்துகள் தரமற்றவை: மருந்து கட்டுப்பாட்டு வாரியம்

நாடு முழுதும், ஆகஸ்ட் மாதம் நடந்த ஆய்வில், 220 மருந்துகள் தரமற்றவையாகவும், ஒரு மருந்து போலியாகவும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டில் விற்பனை செய்யப்படும், அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும், மத்திய - மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் வாயிலாக, ஆய்வு செய்யப்படுகின்றன.

அதில், போலி மருந்துகள் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 1,000க்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.

220 மருந்துகள் தரமற்றவையாகவும், ஒரு மருந்து போலியானதாகவும் இருந்தது கண்டறியப்பட்டது.

அதில் காய்ச்சல், வலி நிவாரணம், அமில எதிர்ப்பு, உயர் ரத்த அழுத்தம், சளி கிருமித் தொற்று, அஜீரண பிரச்னைகள் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், அதன் விபரங்கள், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின், https://cdsco.gov.in/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.