குழந்தைகளை தாக்கும் நீரிழிவை அறிகுறி வைத்து கண்டுபிடிக்கலாம்!

குழந்தைகளை தாக்கும் நீரிழிவு குறைபாட்டிற்கு முதல் வகை (டைப் 1) சர்க்கரை நோய் என்று கூறப்படுகிறது.

எடை குறைதல், சிறுநீர் அடிக்கடி கழித்தல், பசி, தாங்க முடியாத அளவுக்கு இருத்தல், தாகம், வாய் அடிக்கடி உலர்ந்துவிடும் அளவுக்கு அதிகமாக இருத்தல் ஆகியவை அறிகுறிகள்.

இந்த அறிகுறிகளில் எது இருந்தாலும், உடனடியாக மருத்துவரை அணுகி குழந்தையின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

இரவு நேரத்தில், அடிக்கடி அறியாமல் சிறுநீர் கழித்து துணி மாற்ற வேண்டியிருந்தால், சர்க்கரை அளவை பார்ப்பது நல்லது.

இது நோயின் ஆரம்ப கட்டமாக இருக்கலாம். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி தேவைப்படும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

பேக்கரி உணவு, நொறுக்குத் தீனிகள், பிஸ்கட், பன், சிப்ஸ் உள்ளிட்ட உணவுகளை தவிர்க்கலாம்.

காய்கறி, சிறுதானிய உணவு ஆகியவற்றை அனைத்து தரப்பினரும் உட்கொள்ளலாம்.