குளிர்காலத்தில் பொடுகு தொல்லை பிரச்னையா? தீர்வுகள் இதோ!

தலையில் பொடுகு தொல்லை இருப்பவர்கள், குளிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

இக்காலத்தில், தலை குளித்து, வெயிலில் நடந்தால், வெப்பத்தின் காரணமாக அரிப்பு ஏற்பட்டு, வெள்ளை போல படர்ந்திருக்கும்.

சொரியாசிஸ் மற்றும் அரிப்பு போன்ற பிரச்னை உள்ளவர்கள், உடனடியாக தோல் மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். பொடுகை போக்க எளிய தீர்வுகள் சிலவற்றை பார்ப்போம்.

அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நன்றாக காய்ச்சி ஆறவைத்து தினசரி தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.

சின்ன வெங்காயம் கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்த பின்னர், 15 நிமிஷம் கழித்து குளிக்கலாம்.

வேப்பிலை சாறும் துளசி சாறும் கலந்தும் தலையில் தேய்க்கலாம்.

பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்த்து, 15 நிமிஷம் கழித்து குளித்தால் சில நாட்களில் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

தேங்காய் எண்ணையுடன் வேப்பெண்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.

ஆலிவ் எண்ணெயுடன் இஞ்சிச்சாறு சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து பிறகு முழுகி வந்தால் பொடுகு குறையும்.