காஷ்மீருக்கு ஹனிமூன் சென்றால் பார்க்க வேண்டிய அழகிய 5 இடங்கள் !
சொர்க்க பூமி என அழைக்கப்படும் காஷ்மீர் ஹனிமூன் தம்பதியினருக்கு மறக்க முடியாத இடமாக உள்ளது. இங்கு ஹனிமூன் செல்லும்போது தவறாமல் பார்க்க வேண்டிய 5 இடங்கள் குறித்து பார்க்கலாம்.
ஸ்ரீநகர்... இங்குள்ள தால் ஏரி அழகான படகுகளுக்கு பெயர் பெற்றது. சுற்றியுள்ள மலைகளின் அழகிய காட்சிகளை ரசித்தவாறு, சூரிய அஸ்தமனத்தில் ஷிகாராவில் பயணம் செய்வது மெய்சிலிர்க்க வைக்கும்.
குல்மார்க்... ஆடம்பரம், சாகசம் மற்றும் இயற்கை பிரியர்களுக்கு இது சொர்க்கமாகும். அழகிய நிலப்பரப்புகள் மற்றும் பனி மூடிய மலைகளுக்கு பெயர் பெற்றது. கோண்டோலா சவாரி, பனிச்சறுக்கு என உற்சாகமாக மகிழலாம்.
பஹல்காம்... லிடர் ஆற்றின் குறுக்கே உள்ள இந்த இடம், மவுனத்தையும், காதலையும் விரும்புபவர்களுக்கு ஏற்ற இடமாகும். அழகிய பள்ளத்தாக்குகள், பைன் காடுகள் என இயற்கையை ரசிக்கலாம்.
சோன்மார்க்... கம்பீரமான பனிப்பாறைகள் மற்றும் அமைதியான ஏரிகளால் சூழப்பட்டுள்ளது. பனிப்பாறையில் டிரெக்கிங், சிந்து நதியில் ரிவர் ராஃப்டிங் என உற்சாகமாக பொழுதை கழிக்கலாம்.
நைஜீன் ஏரி... இங்குள்ள படகில் தங்கும் போது நகர சலசலப்பிலிருந்து விலகி, அழகிய நீர் மற்றும் அமைதியான சுற்றுப்புற காட்சிகள் உற்சாகத்தை அளிக்கும்.