எப்போதும் தோலுடன் சாப்பிட வேண்டிய 6 பழங்கள்

ஆப்பிள்... நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் இதன் தோலில் நிறைந்துள்ளன. செரிமானம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

வெள்ளரிக்காய்... இதன் தோலில் வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. உடலை நீரேற்றமாக வைப்பதுடன் சரும ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கிறது.

சப்போட்டா... நார்ச்சத்து மற்றும் நன்மையளிக்கும் ஊட்டச்சத்துகள் இதன் தோலில் நிறைந்துள்ளன; செரிமானத்தை மேம்படுத்த உதவும்.

கிவி... வைட்டமின் ஈ மற்றும் நார்ச்சத்து நிறைந்த கிவி பழத்தின் தோல், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பேரிக்காய்... நார்ச்சத்து மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஃபிளவனாய்டுகள் நிறைந்துள்ளன.

பிளம்ஸ்... இதன் மெல்லிய தோல் ஆக்ஸிஜனேற்றங்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்தின் ஆதாரமாக உள்ளது. செரிமானம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது.