தனியா விதைகளின் 6 ஆரோக்கிய நன்மைகள்
சமையலில் நீங்கா இடம் பிடித்துள்ள கொத்தமல்லி விதைகள் ( தனியா) பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
கொத்தமல்லி
விதை சாறு நீர்பெருக்கியாக செயல்படுகிறது. இது உடலில் அதிகப்படியான
சோடியம் மற்றும் தண்ணீரை வெளியேற்றவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும்
உதவுகிறது.
இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நாளமில்லா சுரப்பிகளில் இருந்து ஹார்மோன்களை முறையாக சுரக்க உதவுகிறது. மேலும், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைக் குறைக்கிறது.
இதிலுள்ள எத்தனாலிக் சாறு, நீரிழிவு குறைப்பாட்டை எதிர்ககும்
பண்புகளை கொண்டுள்ளது. மேலும், பீட்டா செல்களின் செயல்பாட்டை
அதிகரிக்கிறது.
தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், செரிமானத்தை ஊக்குவிக்கும்.
இது கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுவதுடன், கூந்தல் உதிர்வதைத் தடுக்கவும் உதவுகிறது. கூந்தலை வலுப்படுத்துவதுடன், இளம் நரையைத் தாமதப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
இதிலுள்ள லினோலிக் அமிலம் எரிச்சலைக் குறைக்கும் வலி நிவாரணி
பண்புகளைக் கொண்டுள்ளது; வாய் புண்கள் மற்றும் பிற புண்களையும்
குணப்படுத்தக்கூடும்.