ஒரு வயது குழந்தைக்கு ஏற்படும் காய்ச்சலுக்கு என்ன முதலுதவி கொடுக்கலாம்?

காய்ச்சல் ஒரு நோய் அல்ல; அறிகுறி மட்டுமே. அச்சப்பட தேவையில்லை என டாக்டர்கள் கூறுகின்றனர்.

மிதமான காய்ச்சலால் தீங்கு ஏற்பட வாய்ப்பு குறைவு.

இரவு நேரத்தில் உடல் வெப்பம் அதிகரித்தால் துாய ஈரத்துணியால் உடலை துடைத்து வெப்பத்தை தணிக்கலாம்.

அவசர கால, இரவு நேர, மருத்துவ வசதி கிடைக்காத சூழலில் பாராசிட்டமால் மருந்து எடுத்து கொள்ளலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

6 மணிநேர இடைவெளியில் 10 முதல் 15 மில்லி கிராம் கொடுக்கலாம்.

இது முதலுதவி மட்டுமே. இருப்பினும் அடுத்த நாள் காலையில் டாக்டரிடம் நேரில் குழந்தையை அழைத்து செல்வது அவசியம்.

காய்ச்சலுக்கான காரணத்தை அறிந்து டாக்டர் அதற்கேற்ப மருத்துவ ஆலோசனை வழங்குவார்.