மன அழுத்தத்திற்கும் மனச்சோர்வுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
மன அழுத்தம் என்பது வெளிப்புற சூழல் காரணமாக ஏற்படும் தற்காலிக எதிர்வினை.
தேர்வு, வேலைப்பளு, குடும்ப பிரச்னை போன்ற சூழல்களின் போது கோபம், பதட்டம் ஏற்படும். அச்சூழல் மாறியதும் மனநிலை மாறிவிடும்.
மனச்சோர்வு என்பது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் நிகழ்வது.
எந்த வேலையிலும் ஆர்வமில்லாமல் இருப்பது, துாக்கம் கெடுவது, காரணமின்றி கவலைப்படுவது, தற்கொலை எண்ணங்கள், தனிமை உணர்வு அதிகம் காணப்படும்.
மேலும் இவற்றால், வழக்கமான வாழ்க்கை முறையில் பாதிப்பு ஏற்பட்டால், மனச்சோர்வு இருப்பதாக உறுதி செய்யலாம்.
மகிழ்ச்சி ரசாயனங்களான செரட்டோனின், டோபமைன் குறைவாக சுரக்கும்.
மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசால் ரசாயனத்தை, அட்ரீனல் சுரப்பி அதிகமாக சுரக்கும் போது, துாக்கம் கெடுவது, ரத்த அழுத்தம் உயர்வது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
மனச்சோர்வு பாதிப்புக்கு, தெரபி, மருந்துகள், கவுன்சிலிங் ஆகிய மூன்றும் அவசியம். மருத்துவ ரீதியாகதான் பாதிப்பில் இருந்து மீட்க முடியும் என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.