டார்க் சாக்லேட்... நீரிழிவு கொண்டோர் விரும்பி சாப்பிடலாமா?
டைப்-2 நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை சேர்க்காத சாக்லேட் சாப்பிடும்போது, உடலில் உள்ள பீட்டா செல்களை தூண்டி, இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது.
சரியான டார்க் சாக்லேட்டை தேர்வு செய்து சாப்பிடும் போது, அது சர்க்கரை அளவை அதிகரிக்காது. இது, இன்சுலின் சுரப்பியை நன்றாக செயல்பட வைக்கும்.
டார்க் சாக்லேட்டில் பாலிபினால் மற்றும் ஆன்டி- ஆக்ஸிடண்ட் இருப்பதால், உடல் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. பாலிபினால்கள் இன்சுலின் சுரப்பிகளை சரியாக செயல்பட தூண்டுகிறது.
பாலிபினால்கள் அதிகமுள்ள டார்க் சாக்லேட்டை தேர்வு செய்து சாப்பிட வேண்டும். இதில் கோக்கோ அளவு அதிகமாகவும், நார்ச்சத்து உள்ள டார்க் சாக்லேட்டை தேர்வு செய்வது அவசியமாகும்.
குறிப்பாக உணவு எடுக்கும் அதேவேளையில் சாக்லேட்டை சேர்த்துச் சாப்பிட்டால், வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவின் கலோரியும் குறையும்.
சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளாதது, கடினமான வேலைகளை செய்தல் போன்றவை சர்க்கரை அளவு குறைய காரணமாக இருக்கலாம்.
அப்போது, நீரிழிவு நோயாளிகள் இனிப்பு சுவை குறைவாக இருக்கும் சாக்லேட்களை கையில் வைத்திருப்பது நல்லது. திடீரென சர்க்கரை அளவு குறைந்தால் சாக்லேட்களை உண்ணுவது மூலம் இயல்பு நிலைக்குத் திரும்பலாம்.
தற்போது சுகர் ப்ரீ டார்க் சாக்லேட்டுகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றைத் தேர்வு செய்து குறைந்தளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.