பக்கவாதம் மற்றும் ரத்த வகை இடையே தொடர்பு உள்ளதா?

பொதுவாக நான்கு ரத்த வகைகள் (ஏ, பி, ஏபி, ஓ) உள்ளன.

இதில் 60 வயதுக்கு முன்பாக பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு, 'ஏ' ரத்த பிரிவினருக்கு, மற்றவர்களை விட 16% அதிகம் என அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது.

18 - 59 வயதுக்கு உட்பட்டவர்களில் பக்கவாதம் ஏற்பட்ட 17 ஆயிரம் பேரிடமும், ஏற்படாத 6 லட்சம் பேரிடமும் நடத்திய ஆய்வில் இதை கண்டறிந்தனர்.

இதற்கான காரணம் என்பது முழுமையாக இன்னும் கண்டறியப்படவில்லை.

இருப்பினும் 'ஏ' ரத்த வகையில் ரத்த உறைதலுக்கான புரோட்டின் அதிகம் இருப்பது காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரத்த உறைவால் மூளைக்கு செல்லக்கூடிய ரத்த ஓட்டம் தடைபட்டு சேதமடையும் போது, பக்கவாதம் உண்டாகக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, தொடந்து இது குறித்த ஆய்வுகள் நடக்கின்றன.