பனிக்காலத்தில் உறையும் சளி.. சீராக்க டிப்ஸ்!!

பனிக்காலத்தில் அதிக குளிரால், சிலருக்கு சளி உறைந்து போகும். இதனால் தொண்டையைச் செருமித் துப்பினால் கூட சளி வராது. இந்த பிரச்னைக்கு தீர்வு தர சில டிப்ஸ் இதோ...

நல்லெண்ணெயில் மிளகு, சீரகம் பொரித்து வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.

வெதுவெதுப்பாய் இருக்கும் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நெய்யை ஐந்தாறு சொட்டு மூக்கு வழியாக விட்டால், தொண்டை வழியாக இறங்கி சளியை கரைத்து வெளியேற்றும்

ஒரு லிட்டர் தண்ணீரில், கோரைக் கிழங்கு - 10 கிராம், சுக்கு - 5 கிராம் சேர்த்து, அரை லிட்டராக கொதிக்க வைத்து குடிக்க, மார்பில் சளி கட்டாது.

துளசி நீரை தொடர்ந்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக அளவில் அதிகரிக்கலாம். மார்பு சளி மற்றும் இருமலில் இருந்து விடுபட துளசி இலை நீர் குடிக்கலாம்.

தேங்காய் எண்ணெய்யை சூடு செய்து அதில் கற்பூரம் சேர்த்து, அந்த கலவையை நெஞ்சில் தடவ வேண்டும். இதனால் உறைந்த சளியை கரைக்க முடியும். தினமும் இரண்டு வேளை செய்யவேண்டும்.

தேங்காய் எண்ணெய்யை சூடு செய்து அதில் கற்பூரம் சேர்த்து, அந்த கலவையை நெஞ்சில் தடவ வேண்டும். இதனால் உறைந்த சளியை கரைக்க முடியும். தினமும் இரண்டு வேளை செய்யவேண்டும்.