வன்முறை உணர்வை வளர்க்கும் கார்ட்டூன் சேனல்…பெற்றோர்கள் உஷார்!
செல்போனில் எப்போதும் விளையாட்டு என்று இருக்கும் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்ப டீவிக்களில் கார்ட்டூன் சேனல்களை பார்க்க வைப்பதுண்டு.
கார்ட்டூன் கதாபாத்திரங்களை தொடர்ந்து பார்க்கும் குழந்தைகள் அந்த கேரக்டராகவே தங்களை பாவித்து கொள்கிறார்கள்.
கார்ட்டூன் சேனல்களை பார்த்து வளரும் குழந்தைகளது பேச்சிலும் நடவடிக்கையிலும் வித்தியாசமான மாற்றத்தை உணர்வீர்கள்.
வளர்ந்த பிறகு கார்ட்டூன் சேனல்கள் தாண்டி வன்முறை நிறைந்த கார்ட்டூன்களை அவர்களே யூ ட்யூப் சேனலில் போய் பார்த்துகொள்கிறார்கள்.
வன்முறை நிறைந்த கார்ட்டூன் கதாபாத்திரங்கள் குழந்தையின் மனதில் எதிர்மறையான சிந்தனைகளையே உருவாக்கும்.
பணிந்து போவதை விட அதிகாரத்தோடு செல்வதுதான் அவர்களது வழிமுறையாக மாறும்.
இந்த பழக்கத்தில் இருந்து மாற்றம் பெற பெற்றோர்கள் முதலில் உங்கள் குழந்தைகளோடு நேரத்தை செலவிடுங்கள்.
குழந்தைகளை ஓவியம், நடனம் போன்ற சிறப்பு வகுப்புகள், மற்றும் கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுத்தலாம்.
இப்படி செய்வதால் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் அவர்கள் மனதை விட்டு நீங்கவும், அவர்களும் தனித்திறமையுடன் வளரவும் உதவும் .