கசகசாவின் 7 ஆரோக்கிய நன்மைகள்!
கசகசா விதைகளில், அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு
மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் , வைட்டமின் பி, காப்பர்,
துத்தநாகம், புரதம், கால்சியம், இரும்பு உட்பட பல்வேறு சத்துக்கள்
நிறைந்துள்ளன.
இதில், 50 சதவீதம் எண்ணெய் தன்மை இருக்கிறது. இந்த எண்ணெய் கொழுப்பு தான் உடலுக்கு நன்மை செய்கிறது.
பெண்களின் ஆரோக்கியமான கருவுறுதலுக்கு, கசகசா உதவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அரைத்த கசகசா விழுதில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து அரிப்பு, நமைச்சல் மற்றும் தீக்காயங்கள் மீது பூச, நிவாரணம் கிடைக்கும்.
கசகசாவையும், பாலையும் கலந்து சாப்பிடுவதால், தசைகள் மற்றும் எலும்புகள் பலப்படுகின்றன.
இதிலுள்ள ஓதிக் மற்றும் லினோலிக் அமிலங்கள், இதய நோய் மற்றும் மார்பக புற்றுநோய், பெருங்குடல், புரோஸ்டேட் புற்றுநோய் ஆபத்தை தவிர்க்க உதவுவதாக, ஆய்வுகள் கூறுகின்றன.
இரண்டு தேக்கரண்டி அளவு அரைத்த கசகசாவை, 200 மில்லி மாதுளம் பழ சாற்றில் கலந்து சாப்பிட, இரவில் நிம்மதியான துாக்கம் கிடைக்கும்.
கசகசாவில் நார்ச்சத்து இருப்பதால், உடல் எடையை குறைக்க இது பெரிதும் உதவுகிறது. எனவே, தினமும் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.