சிறுநீரக தொற்று அறிகுறிகள் அறிவோமா!
சிறுநீரக (யூரினரி) தொற்று என்பதை இரண்டாக பிரிக்கலாம். சிறுநீரக தொற்று மற்றும் சிறுநீரக பிளாடர் தொற்று.
சில சமயனங்களில் சிறுநீரக தொற்று உயிரிழப்பு வரை ஏற்படுத்தி விடும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
இதற்கு, விலாஎலும்பு வலி, குளிர்காய்ச்சல், ஆக்சிஜன் குறைவது போன்ற அறிகுறிகள் தென்படும்.
அவ்வாறு, இருப்பின் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். யூரினரி தொற்று என்றால் அடிக்கடி சிறுநீர் கழித்தல், எரிச்சல் போன்று இருக்கும்.
பொதுவாக, சர்க்கரை, ரத்த அழுத்தம்,கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் அதற்கான சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை மட்டுமே மேற்கொள்கின்றனர்.
இப்பிரச்னைகள் இருப்பின், ஆண்டுக்கு ஒரு முறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.
தொற்றை தவிர்க்க, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது மற்றும் சுகாதாரமான பழக்கவழக்கங்களை பின்பற்றுவது அவசியம்.