இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மாதுளை

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உணவு முறைகளைக் கண்காணிப்பது மிகவும் அவசியம். வயதுக்கேற்ப நல்ல இதய ஆரோக்கியம் முக்கியமானது.

இதயப் பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி மாதுளம் பழங்களை உட்கொள்வது அவசியமானது. அதில் இதயத்துக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதாக டயட்டீசியன்கள் கூறுகின்றனர்.

இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சக்தி வாய்ந்த ஆத்தரோஜெனிக், முகவர் போல் செயல்படும்.

இவை தமனிகளைச் சுத்தப்படுத்தவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ரத்த நாளங்களில் அடைப்பைத் தடுக்கவும் உதவுவதால், இதய ஆரோக்கியத்துக்கு பங்களிக்கிறது.

மாதுளம் பழங்களைத் தவிர்த்து உணவில் அதிக நார்ச்சத்து, பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்க்கும் போது இதயம் மேலும் ஆரோக்கியமாகும்.

உணவில் ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேர்ப்பது அவசியமாகும். அதேசமயம் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களில் உள்ள டிரான்ஸ் கொழுப்பு, நிறைவுற்ற கொழுப்புகளைத் தவிர்ப்பது முக்கியம்.

இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க, மது அருந்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் புகைபிடிப்பதை விட்டுவிட வேண்டும்.