விட்டிலிகோ எனும் வெண்புள்ளி ஏன் ஏற்படுகிறது?

'ஆட்டோ இம்யூன் டிசார்டர்' என்று சொல்லப்படும் உடலில் எந்தப் பகுதியை பாதிக்கிறதோ, அதற்கேற்ப பிரச்னைகள் வரும். அதில் ஒன்று தான் விட்டிலிகோ.

இதில் நோய் எதிர்ப்பு செல்கள், தோலுக்கு நிறம் கொடுக்கும் 'மெலனோசைட்ஸ்' என்ற நிறமியை முழுமையாக சிதைத்து விடும்.

எந்த இடத்தில் நிறமி தாக்குதலுக்கு உள்ளாகிறதோ, அந்த இடம் வெள்ளையாகி விடும்.

இரண்டு வயது குழந்தை முதல், 90 வயது தாத்தா வரை யாரை வேண்டுமானாலும் இது பாதிக்கலாம்.

சிலருக்கு ஒரு இடத்தில் மட்டும் வந்து, வேறு எங்கும் பரவாமல் அப்படியே இருக்கும்.

சிலருக்கு உடல் முழுதும் பரவும். பாதிப்பு ஏற்பட்டதும் சிகிச்சை எடுத்தால், மற்ற இடங்களுக்கு பரவுவதை தடுக்கலாம்.

கிரீம் உட்பட வெளியில் பூசும் மருந்துகள், பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிவாரணம் தரும். மற்ற இடத்தில் பரவுவதை தடுக்காது. மாத்திரைகள் சிறிது உதவலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஐந்து ஆண்டுகள் சிகிச்சை எடுத்தும் எந்த பலனும் இல்லாவிட்டால், நன்றாக இருக்கும் தோலை எடுத்து பாதித்த இடத்தில் 'ஸ்கின் கிராப்டிங்' செய்யலாம்.

நிறம் குறித்து தன்னம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கு சிகிச்சை தேவையில்லை. எப்போது பிரச்னை என்று தோன்றுகிறதோ, அப்போது மருத்துவ ஆலோசனை பெறலாம்.