உடைந்த எலும்புகளை இணைக்கும் ரிசார்பபுள் உலோகத்தகடு!

விபத்து, சண்டை, மாடியில் இருந்து கீழே விழுந்து முகத்தில் அடிபட்டால், பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று, வாய் மற்றும் முகச் சீரமைப்பு நிபுணரை பார்க்க வேண்டும்.

அவர்களால் தான் துரிதமாகச் செயல்பட்டு, முகத்தை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

எலும்பு முறிந்த இடத்தில் ஆரம்பத்தில் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் உலோகத் தகடு பொருத்தப்படும்.

தற்போது டைட்டானியம் உலோகத் தகடு உள்ளது. இதை பொருத்தும் போது எலும்புடன் இணைந்து, இதை உடல் ஒரு அங்கமாகவே ஏற்றுக் கொள்ளும்.

எலும்பு வளர்ச்சி 18 வயது வரை இருக்கும். குழந்தைகள், வளர் இளம் பருவத்தில் உள்ளவர்களுக்கு எலும்புகளின் வளர்ச்சி இருக்கும்.

இதனால், நவீன தொழில்நுட்பத்தில் மூன்று மாதங்களில் கரையக்கூடிய 'ரிசார்பபுள் பிளேட்' என்ற தகடு புதிதாக நடைமுறையில் உள்ளது.

எலும்பு முறிந்த இடத்தில் இந்த தகடை வைத்து இணைக்கும் போது, அடுத்த மூன்று மாதங்களில் தகடு கரைந்து, உடைந்த எலும்பு இயல்பாக இணைந்துவிடும்.