இதயமின் அலைகளை சீர் குலைக்கும் ஷார்ட் சர்க்யூட்!
இதயத்தில் மின் அதிர்வுகளால் இயல்பாக இருந்தால் இதயத் துடிப்பும் சீராக இருக்கும். மின் அதிர்வுகளில் மாற்றம் ஏற்படும் போது இதயத் துடிப்பு மிக மெதுவாகவோ, வழக்கத்திற்கு அதிகமாகவோ இருக்கலாம்.
இதுபோன்ற அசாதாரண 'ஷார்ட் சர்க்யூட்'டுகள் உருவாகும்போது, தலைச்சுற்றல், பக்க வாதம், இதய செயலிழப்பு ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தாக முடியலாம்.
பிறவியிலேயே இதயக் கோளாறுகள் இருப்பது, வயோதிகம், மாரடைப்புக்குப் பின் ஷர்ட் சர்க்யூட்டுகள் ஏற்படலாம். இதனை இசிஜி, எக்கோ பரிசோதனை மூலம் கண்டறிய முடியும்.
வீட்டில் மின்சார பிரச்னையை சரி செய்ய நல்ல எலக்ட்ரீஷியனை அழைப்பது போல, அசாதாரண இதய மின் அதிர்வுகளை சரி செய்ய இதய நோய் நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
டாக்டர் பரிந்துரைக்கும் பரிசோதனைகள், அதற்கான ஆன்டி-ஆர்ரித்மிக் மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்ளும்போது இதைக் கட்டுக்குள் வைக்கலாம்.
மருந்து பலன் தராத பட்சத்தில், 'எலக்ட்ரோபிசியாலஜிக்கல் ஆய்வு, ரேடியோ ப்ரீக்வென்சி அபிலேஷன்' மூலம் குணப்படுத்தலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
இதயத்தின் மின் அலைகள் எவ்வாறு பாய்கிறது என்பதையும், வேகமான இதயத் துடிப்பை ஏற்படுத்தும் ஷார்ட் சர்க்யூட் கம்பிகளை துல்லியமாகக் கண்டறிய முடியும்.
எலக்ட்ரோபிசியாலஜிஸ்டுகள் இதயத்திற்குள் சிறிய 'ரோபோ' வடிகுழாய் கம்பிகளை தொடை வழியாக செலுத்தி, வழக்கமான ஆஞ்சியோகிராம்கள் செய்வது போல செய்வதன் மூலம் அறிந்து கொள்வர்.
சில நேரங்களில் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டால், 3டி முப்பரிமாணத்தில் மின் அலைகள், அசாதாரண ஷார்ட்-சர்க்யூட்கள் இரண்டையும் காண முடியும்.