விந்தணுக்கள் குறைபாடு ஏற்பட காரணம் என்னென்ன? உணவுகள் கைகொடுக்குமா?
மாறிவரும் வாழ்க்கை முறையால் தற்போது ஆண்களிடம் பொதுவாக காணப்படும் பிரச்னையாக விந்தணுக்கள் குறைபாடு உள்ளது.
மேலும் மரபணு காரணிகள், டெஸ்டிஸ் வளர்ச்சி குறைபாடு, விந்து குழாய் அடைப்பு, சிறு வயதில் ஏற்பட்ட அம்மை, மலேரியா காய்ச்சல்களின் பாதிப்புகளால் கூட விந்தணு குறைபாடு வரலாம்.
புராஸ்ட்ரேட் சுரப்பி பாதிப்புகள், ஹார்மோன் குறைபாடு, தீவிர குதிரையேற்றம், சைக்கிள் பயிற்சியும் விந்தணு உற்பத்தியை பாதிக்கலாம்.
அதிகரிக்கும் வெப்பம், காற்று மாசு, மன உளைச்சல், துாக்கமின்மை, சிகரெட், மது பழக்கமும் விந்தணு உற்பத்தியை பாதிக்கின்றன.
விந்தணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க பாரம்பரிய உணவுகள், வைட்டமின் சி, ஈ, டி, துத்தநாக சத்துக்கள் நிறைந்த உணவுகளை தரலாம்.
கருப்பு உளுந்து, கருப்பு எள், கருப்பு கொண்டைக்கடலை, வேர்க்கடலை, முளை கட்டிய பயறு, கம்பு, கேழ்வரகு, மாப்பிள்ளை சம்பா அரிசி அடிக்கடி உண்ணவும்.
சமையலில் வெந்தயம், கசகசா, வெள்ளரி விதை, சின்ன வெங்காயம், வெள்ளை பூண்டு, முருங்கை கீரை பூவை அடிக்கடி சேர்க்கவும்.
மிதமான உடற்பயிற்சி, ஏழு மணி நேர ஆழ்ந்த துாக்கம், வாரம் இரு முறை நல்லெண்ணெய் குளியல் அவசியம்.