நடிகர் ரன்வீருக்கு பிடித்தமான புளோரல் மற்றும் கிராபிக் சட்டைகள்.. இப்போ இதான் டிரெண்டிங்...!
"இது என்ன பூப்போட்ட சட்டை" என கிண்டலடிக்கப்பட்ட 'புளோரல் பேட்டர்ன்' சட்டைகள் தற்போது இளைஞர்களின் விருப்பமான தேர்வாகியுள்ளது.
பீஸ்ட் படத்தில் வரும் ஜாலியோ ஜிம்கானா பாடல் முழுவதும் விஜய் புளோரல் மற்றும் கிராபிக் பேட்டர்ன் சட்டைகளைத் தான் அணிந்திருப்பார்.
பாலிவுட் நடிகரும் பேஷன் காதலருமான ரன்வீர் சிங்கின் பிடித்தமான சட்டை தேர்வாகவும் இவை உள்ளன.
அவரது இன்ஸ்டாவினை டிஜிட்டல் ரெயின்போ என்பார்கள். அந்த அளவிற்கு ரகம் ரகமாக விதம் விதமான வண்ண ஆடைகளுடன் போஸ் கொடுத்திருப்பார்.
கடந்த சில மாதங்களாக கலர் கலர் சட்டைகளுடன் அவர் வெளியிட்ட படங்கள் லட்சக்கணக்கில் லைக்ஸ் அள்ளியது.
கழுத்தில் அணிந்துள்ள வெள்ளை முத்துச் சரமும், வெள்ளை நிற பக்கெட் தொப்பியும், ஊதா வண்ண பெரிய பிரேம் கண்ணாடியும் ஜாலியான லுக்கை தருகிறது.
கோ-ஆர்ட்ஸ் உடை, மஞ்சள் டின்ட் கொண்ட கூலிங்கிளாஸ், கடுக்கன், முத்து நெக்லஸ் ஆகியவற்றுடன் அட்டகாச சிரிப்பில் போஸ் தருகிறார் ரன்வீர்.
புளோரல், கிராபிக் பேட்டர்ன் சட்டைகளுக்கு பிறகு ரன்வீர் அதிகம் விரும்பும் சட்டை இது போன்ற சில்க் வகை சட்டைகள்.