மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏரோபிக் பயற்சிகள்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மொனாஷ் பல்கலை, மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்த ஆய்வு மேற்கொண்டது.

சராசரியாக 64 வயதுடைய 107 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதில், பக்கவாதம் ஏற்பட்ட பிறகும் கூட ஏரோபிக் பயிற்சிகள் தொடர்ந்து செய்பவர்களுக்கு மூளை ஆரோக்கியம் மேம்படும் என கண்டறியப்பட்டது.

ஏரோபிக் பயிற்சி என்பது நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி மற்றும் படகோட்டுதல் என இதயத்தின் செயல்பாட்டை அதிகப்படுத்தும் பயிற்சிகளின் பொதுப் பெயர்.

வழக்கமான ஏரோபிக் உடற்பயிற்சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைக்கும்.

இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டிற்கு இது மிகவும் முக்கியமானது. மேலும், மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.