சம்மரில் உடலை குளிர்ச்சியாக வைக்க ஸ்ட்ராபெரி மில்க்: செய்வது எப்படி?
குழந்தைகள், பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி பலருக்கு ஸ்ட்ராபெரி ப்ளேவர் பிடிக்கும்.
அதனை வெறுமனே பழமாக சாப்பிட பலருக்கு பிடிப்பதில்லை. காரணம் புளிப்புச்சுவையும், அழகற்ற தன்மையும்.
ஸ்ட்ரபெரி - 100 கிராம்; சர்க்கரை - 3 ஸ்பூன்; ஹெவி க்ரீம் - 25 கிராம்; பால் - 100 மில்லி.
ப்ரெஷ் ஆன ஸ்ட்ராபெரிக்களை தேர்ந்தெடுத்து அதன் காம்புகளை நீக்கிவிட்டு கழுவிக்கொள்ளவும்.
ஒரு கின்னத்தில் போட்டு சர்க்கரையை தூவி கூழாகிவிடாதபடி மென்மையாக புரட்டிக்கொள்ளுங்கள்.
ஒரு மணி நேரம் ப்ரிட்ஜில் வையுங்கள். பின்னர் எடுத்து டம்பளரில் போட்டு, அதில் ஹெவி க்ரீமை ஊற்றி, குளிர்ச்சியான பாலையும் சேர்த்து கலந்து பருகலாம்.
ஸ்ட்ராபெரி வெயில் காலத்திற்கு ஏற்ற பழம். இது உடலில் குளிர்ச்சியை உண்டாக்கும்.