ஆரோக்கியத்தை அள்ளித்தரும் எள் !

உடல் எடை அதிகரிக்க உதவும் முக்கிய உணவு பொருட்களில் ஒன்று எள் விதை. இதிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் மருத்துவ குணம் உடையது.

எள்ளில், 20 சதம் புரதம், 50 சதம் எண்ணெய், 16 சதம் மாவு பொருட்கள் உள்ளன. எள் விதை சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

குடல் சார்ந்த பிரச்னைகளை தீர்க்க உதவுகிறது. குடலில் கழிவுகளை முழுமையாக வெளியேற்றும்.

எள் விதையை வெல்ல பாகு, தேங்காய் சேர்த்து சாப்பிடலாம். வறுத்து பொடி செய்து, நெய் கலந்தும் சாப்பிடலாம்.

கருப்பு எள்ளில் சுண்ணாம்பு சத்து அதிகம். வெள்ளை எள்ளில் இரும்பு சத்து அதிகம். மெக்னீஷியம் சத்தும் உள்ளது.

அடிக்கடி சாப்பிட்டால், கொலஸ்ட்ரால், தைராய்டு, மெனோபாஸ் பிரச்னைகள் சரியாகும்.

சுவாச மண்டலம் ஆரோக்கியமாகும். எலும்பு தேய்மானத்தை தடுக்கும்.

எள்ளில் உள்ள இரும்பு சத்து, ரத்த குழாய்கள் சுருங்கி விரியும் தன்மையை அதிகப்படுத்துகிறது. இதயம் தொடர்பான நோய்களை தடுக்கிறது.