வயதும்... மூளையின் திறனும் !

மூளையில் ஏற்படும் மாற்றங்கள் நம் சிந்தனையைப் பாதிப்பது மட்டுமின்றி, உடல் நலத்தில் ஏற்படும் மாற்றங்களும் நமது மூளையைப் பாதிக்கக்கூடும்.

மூளையின் அறிவுசார், உளவியல் செயல்பாடு ஆகியவை 30 வயதில், உச்சத்திலிருந்து, பின் குறைய துவங்கும் என பலரும் நினைக்கின்றனர்.

ஆனால் 55 - 60 வயதில் தான் சிறப்பாக இருக்குமென, மேற்கு ஆஸ்திரேலியா பல்கலை ஆய்வு வேறுவிதமாக தெரிவித்துள்ளது.

பணி நினைவாற்றல் உள்ளிட்ட திறன்கள் 20-களின் பிற்பாதியில் குறைகிறது.

இருப்பினும், நிதிசார், உணர்வு சார் நுண்ணறிவு, கடமை உள்ளிட்ட திறன்கள் வயது கூடக்கூட மேம்படுகிறது.

அனைத்து திறன்களையும் ஒருங்கிணைத்து ஆராய்ந்தபோது, உளவியல் ரீதியான செயல்பாடு 55 - 60 வயதில், உச்சம் தொடுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.