இதய நோய் அபாயத்தை குறைக்கும் வழி
சர்வதேச அளவிலான சமீபத்திய ஆய்வில், 14 வயதில் பெண்
குழந்தைகளிடமும், 18 வயதில் ஆண் குழந்தைகளிடமும் சிகரெட் புகைக்கும்
பழக்கம் ஆரம்பித்து விடுவதாக தெரிய வந்துள்ளது.
சிகரெட் பழக்கத்தை நிறுத்தப் போகிறேன் என்று தாங்களாகவே முயற்சி செய்பவர்களில், 3 % பேர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர்.
நிகோடின் மாற்று தெரபியுடன் முறையான ஆலோசனை பெறும் போதும், 40 % பேர் மட்டுமே இதிலிருந்து வெளியில் வருகின்றனர்.
சிகரெட் பழக்கத்தில் இருந்து விடுபட்டு 100 % வெளியில் வர, இதுவரையிலும் எந்த தெரபியும் இல்லை.
ஒரு சிகரெட் கூட மரபணுவில் மாற்றத்தை துாண்டலாம்.
சிகரெட் பழக்கத்தில் இருந்து முழுமையாக வெளியில் வந்த
பின்னரும் பாதிப்பு இருக்குமா என்றால், ஒருவர் 10 ஆண்டுகள் நிறுத்தினால் வரக்கூடிய நுரையீரல் கேன்சர் பாதிப்பு 50 % குறையும்.
ஒரு சிகரெட் பிடித்து முடித்த 20 நிமிடங்களில் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்கு வரும்.
ஒரு ஆண்டு வரையில் சிகரெட் பிடிப்பதை முழுமையாக நிறுத்தினால், இதய நோய்கள் வரும் சாத்தியங்கள் பாதியாக குறையும்.