இயற்கை அழகில் மிதக்கலாம்… இந்த ஆலப்புழா படகு வீட்டில்!

காஷ்மீருக்கு அடுத்தப்படியாக படகு வீடுகளை, தனது பாரம்பர்யமாக மாற்றி விட்டது கேரளாவில் உள்ள ஆலப்புழா.

பாரம்பர்யமிக்க வீடு போல் கம்பீரமாக மிதக்கும் படகில் தான் நீங்கள் தங்க வேண்டும்.

ஆலப்புழா மற்றும் குமரக்கோம் இவை இரண்டும் பேக் வாட்டர் மற்றும் படகு சவாரிக்கு மிகப் புகழ் பெற்றது.

குறிப்பாக குமரக்கோமில் அதிக அளவில் திருமணமானவர்கள் தங்களது ஹனிமூனுக்கு வருகிறார்கள்.

கரையோர சந்தைப் பகுதியின் முன் படகினை நிறுத்தி அங்கு கிடைக்கும் மீன்களை வாங்கி பிரஷ்ஷாக சமைத்து கொடுப்பார்கள்

மாலை ஆறு மணிக்குப் படகை ஓர் இடத்தில நிறுத்தி விடுவார்கள். இரவு அந்த அமைதியான சூழலில் தங்கலாம்.

பின்னர் மறுநாள் காலை ஒன்பது மணிக்கு தொடரும் பயணத்தில் மீண்டும் நதிவலம் செல்லலாம்.