அல்சைமரை வேகப்படுத்தும் மது !

மது அருந்துவதால் பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படுவது பலரும் அறிந்தது தான்.

அதேவேளையில், சமீபத்திய ஆய்வுகளில் இதுவரை வெளிவராத பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

வயதாவதால் ஏற்படுகின்ற ஞாபகம் மறதிநோய் தான் அல்சைமர்ஸ். மது அருந்துவதால் இந்த நோயின் பாதிப்பு அதிகமாவது தெரிய வந்துள்ளது.

இந்த நோயின் பல்வேறு நிலைகளில் இருந்த 75 நோயாளிகளை விஞ்ஞானிகள் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

அவர்களது மூளையில் ஏற்பட்டுள்ள செல் இறப்பு, செல்களுக்கு இடையே தகவல் பரிமாற்றத்திலுள்ள குழப்பம், ரத்த நாளங்களின் பாதிப்பு ஆகியவற்றை மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகளுடன் ஒப்பிடப்பட்டது.

இரண்டு பாதிப்புகளும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருப்பது தெரிய வந்துள்ளது.

குளிர் பிரதேசங்களில் குறைந்த அளவு மது அருந்துவது என்பது அத்தியாவசியத் தேவையாக உள்ளது.

ஆனால் இந்த அளவு அதிகரிக்கும் போது அது பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும். அதிக மது அல்சைமர் நோயைத் தீவிரப்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.