குட்டீஸ்கள் விரும்பும் ஆலு பனீர் கட்லெட்
தேவையானப் பொருட்கள்: உருளைக்கிழங்கு - 2, பச்சை மிளகாய் - 1, இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன், கரம் மசாலா, சாட் மசாலா - தலா 0.50 டீஸ்பூன்.
பனீர் - 100 கிராம், கொத்தமல்லி இலை - சிறிதளவு, பிரட் துாள் - 3 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையானளவு.
அகலமான பாத்திரத்தில், வேக வைத்த உருளைக்கிழங்குகளை போட்டு, நன்றாக மசித்து, பனீரை துருவி சேர்க்கவும்.
பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, சாட் மசாலா, நறுக்கிய கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.
இந்த கலவையில் சிறிதளவு பிரட் துாள் சேர்த்து பிசைந்து, கையில் எண்ணெய் தடவி, சிறு, சிறு உருண்டைகளாக்கி கட்லெட் வடிவம் கொடுக்கவும்; இதை பிரட் துாளில் பிரட்டவும்.
அடுப்பில் கடாயை வைத்து தேவையானவு எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் கட்லெட்களை போட்டு, மிதமான தணலில் பொன்னிறமாக பொறித்தெடுக்கவும்.
இப்போது, சுவையான ஆலு, பனீர் கட்லெட் ரெடி. சிறிது நேரம் டிஷ்யூ பேப்பரில் வைத்திருந்தால், எண்ணெயை உறிஞ்சிவிடும்.
கிரீன் சட்னி அல்லது தக்காளி சாஸுடன் சாப்பிட சுவை அள்ளும்.
அதிக எண்ணெய் வேண்டாமென்றால், தோசைக்கல்லில் கட்லெட்டுகளை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொறித்தெடுக்கலாம்.