அமேசான்... உலகின் பெரிய வெப்பமண்டல மழைக்காடு இது !

உலகின் பெரிய வெப்பமண்டல மழைக்காடு அமேசான்.

தென் அமெரிக்காவில் பிரேசில், பொலிவியா, கொலம்பியா, பெரு, வெனிசுலா உட்பட 9 நாடுகளில் பரவியுள்ளது.

இதில் 60 சதவீதம் பிரேசிலில் உள்ளது.

இக்காடு 5.6 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானது. அமேசான் காடுகளின் மொத்த பரப்பளவு 55 லட்சம் சதுர கி.மீ.

இங்கு 39 ஆயிரம் கோடி மரங்கள், 16 ஆயிரம் வகை உயரினங்கள் வாழ்கின்றன.

அமேசான் காடுகளில் 3 கோடி மக்கள் வாழ்கின்றனர்.

உலகில் பெரியளவில் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை வெளியிடுவதால் இது, 'பூமியின் நுரையீரல்' என அழைக்கப்படுகிறது.