ஏஞ்சல்... தரையை தொடாத அருவி இது!
வெனிசுலாவிலுள்ள 'ஏஞ்சல்' அருவி உலகில் உயரமானது (3212 அடி).
இந்தளவு உயரத்தில் இருந்து நீர் விழும்போது, தரையை அடைய நீண்ட நேரமாகும்.
மேலும் விழும் நீரை, புவி ஈர்ப்பு விசை கீழ்நோக்கி இழுத்தாலும், காற்று பக்கவாட்டிலிருந்து அழுத்துகிறது, மேல்நோக்கியும் தள்ளுகிறது.
எனவே, கீழே வர வர, இந்த அழுத்தம் நீரோட்டத்தை பிரித்து, நீர்த்துளிகளாக்குகிறது.
இது தரையை அடையும் போது பனித்துளி போல துாவுகிறது.
வெப்பமான காலத்தில் இதுதான் நடக்கிறது. ஆனால் குளிர் காலத்தில், ஈரப்பதம் அதிகம் என்பதால் குறைந்தளவு நீர், தரையை அடைகிறது.