இந்தியாவில் சூரியன் உதிக்கும் முதல் கிராமம் இது !
வடகிழக்கிலுள்ள மாநிலங்களில் பரப்பளவில் பெரியது அருணாச்சல பிரதேசம்.
இந்தியாவில் முதலில் சூரியன் உதிக்கும் பகுதி இம்மாநிலத்தில் அன்ஜாவ் மாவட்டத்திலுள்ள 'டோங்' கிராமம்.
இது இந்தியாவின் கிழக்கு முனையிலுள்ளது.
கடல்நீர் மட்டத்திலிருந்து 4070 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இங்கு அதிகாலை 3:00 மணிக்கே சூரிய உதயத்தை பார்க்கலாம்.
இந்த இடத்தில் இந்தியா, சீனா, மியான்மர் எல்லைகள் சந்திக்கின்றன.
இதன் அருகில் லோஹித் ஆறு ஓடுகிறது.