இன்று மனிதர்களின் விண்வெளி பயணத்துக்கான சர்வதேச தினம்

ஆண்டுதோறும் மனிதர்களின் விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச தினம் ஏப்., 12ல் கொண்டாடப்படுகிறது.

இது விண்வெளி வீரர்களின் தினம் (Cosmonautics Day) என்றும் இத்தினம் அழைக்கப்படுகிறது.

1957 அக். 4ல் உலகின் முதல் செயற்கைக்கோளான ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் விண்ணில் செலுத்தப்பட்டது.

மேலும் உலகில் 1961 ஏப். 12ல் முதன்முதலாக விண்வெளிக்கு சென்று சாதித்தவர் ரஷ்யாவின் யூரி காகரின்.

இச்சாதனையை அங்கீகரிக்கும் விதமாகவும், விண்வெளியை ஆக்கப்பூர்வ, அமைதி வழியில் பயன்படுத்த வலியுறுத்தியும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இன்று நிலவு, செவ்வாய் கோள்களில் மனிதர்களை குடியமர்த்துவதற்கான ஆராய்ச்சியில் விண்வெளி துறை ஈடுபட்டுள்ளது

விண்வெளி ஆராய்ச்சியில் மனிதகுலத்தின் சாதனைகளைக் கொண்டாடுவது மற்றும் விண்வெளி அறிவியலின் முக்கியத்துவத்தையும் இத்தினம் வலியுறுத்துவது.