ஏப்ரல் 25 : உலக மலேரியா தினம்

2008-ம் ஆண்டு முதல் உலக மலேரியா தினம் என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது .

மலேரியா காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனை கட்டுப்படுத்தவும் இதன் நோக்கமாகும்.

மலேரியா என்பது கொசுக்கடியால் ஏற்படும் ஒரு நோயாகும்.

பிளாஸ்மோடியம் என்னும் ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட, அனோபிலிஸ் என்ற பெண் கொசுக்கள் மனிதனை கடிப்பதனால் இந்த கொடிய நோய் பரவுகிறது.

சில வாரங்களில் காய்ச்சல், அதிகம் வியர்த்தல், சோர்வு, தசைவலி, குளிர், வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும். நடுங்கும் குளிர் மற்றும் அதிக காய்ச்சல் ஆகியவை மலேரியாவின் முக்கிய அறிகுறிகளாகும்.

வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளான அமெரிக்க, ஆசிய, ஆப்பிரிக்காவில் மலேரியா அதிகம் பரவும்.

வீட்டின் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும். தண்ணீர் தொட்டிகளை எப்போதும் மூடி வைப்பது போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் " அதிக சமத்துவமான உலகத்திற்காக மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தை துரிதப்படுத்துதல் " என்பதாகும் .