இன்று அமைதிக்கான விளையாட்டு தினம்

விளையாட்டு என்பது உடல், மனதை ஆரோக்கியமாக வைக்கிறது. விளையாட்டுகளால் சமூகத்திலும் பல வளர்ச்சி ஏற்படும்.

பல்வேறு மொழி, இனம், கலாசார வேறுபாடுகளை கடந்து உலக மக்களை ஒருங்கிணைக்கிறது.

விளையாட்டுக்கு உலகை மாற்றும் சக்தி உண்டு. ஒற்றுமை, புரிதல் மற்றும் சமூக மாற்றத்தை ஊக்குவிக்கும்.

சர்வதேச அளவில் நிலையான வளர்ச்சி, அமைதி, ஒற்றுமை, மனிதநேயம் ஏற்பட விளையாட்டு வழிவகுக்கிறது.

இதை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஏப். 6ல் வளர்ச்சி, அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

1896-ல் ஏதென்ஸில் முதல் நவீன ஒலிம்பிக் போட்டி தொடங்கிய தினத்தை இது நினைவுகூர்கிறது.

'விளையாட்டு இணைப்புகளை கட்டுதல், தடைகளை உடைத்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.