உங்களுக்கு 40 பிளஸ்ஸா? கண்களை சுற்றிலும் வரும் கருவளையத்துக்கு தீர்வு இதோ!

துாக்கமின்மை, உடலில் நீர்ச்சத்து குறைபாட்டால் 40 வயதுக்கு மேல் சிலருக்கு கண்களை சுற்றிலும் கருமையாக தோற்றமளிக்கும்.

துாக்கமின்மை தோலை வெளிறச் செய்து கண்களுக்கு கீழே உள்ள மெல்லிய ரத்த நாளங்களை வெளிப்படையாக காட்டும்.

சிலருக்கு வயது ஆக ஆக கொழுப்பு குறைந்து ரத்த நாளங்கள் நன்றாகத் தெரியும்.

உடலில் போதிய அளவு நீர் இல்லாமல் வறண்டு போனாலும் கண்கள் குழி விழுந்து கருவளையம் தோன்றும்.

கருவளையம் உள்ளவர்கள் கற்றாழை ஜெல் மூலம் கண்களை சுற்றி மசாஜ் செய்ய வேண்டும்.

அதிமதுரம் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து கருவளையத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.

இதனால், கருவளையம் தற்காலிகமாக மறைந்து விடும். தொடர்ந்து கருவளையம் வராமலிருக்க நீர்ச்சத்து நிறைந்த காய்கறி, பழவகைகளை வகைகளை சாப்பிட வேண்டும்.

தினமும் எவ்வித இடையூறுமின்றி 8 மணி நேரம் துாங்க வேண்டும்.

வாரத்துக்கு ஒரு நாள் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.