இன்று ரவீந்திரநாத் தாகூர் நினைவு தினம்!

அன்பு என்பது உரிமை கோருவது அல்ல, சுதந்திரத்தை வழங்குவது.

தண்ணீரை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தால் கடலைக் கடந்துவிட முடியாது; செயலில் இறங்க வேண்டும்.

பெண்கள் மகிழ்ச்சியோடு இருப்பதில் தான், ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியே அடங்கி இருக்கிறது.

குழந்தைகளை நம்முடைய குறுகிய எல்லைக்குள் முடக்கக் கூடாது; அவர்கள் புதிய உலகிற்காகப் பிறந்தவர்கள்.

இந்த உலகை நாம் தவறாகப் படித்துவிட்டு, அது நம்மை ஏமாற்றுகிறது என்று சொல்கிறோம்.

தன்னம்பிக்கை என்னும் ஒளியோடு இருப்பவர்கள் வாழ்க்கைப் பாதையில் வெற்றிநடை போடுவார்கள். அவர்களால் மற்றவர்களுக்கும் வழிகாட்ட முடியும்.

மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது, ஆனால் எளிமையாக இருப்பது மிகவும் கடினம்.

எப்போது பிரச்னை என்று ஒன்று தோன்றுகிறதோ அப்போதே அதை தீர்க்கும் வழிமுறை ஒன்றும் இருக்க வேண்டும்

லட்சியம் நிறைவேற வேண்டுமே என்ற கவலை இருந்தால் தான் மனத்தெளிவு உண்டாகும்.