இன்று சர்வதேச பழங்குடியினர் தினம்

1994-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐநாவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

பொதுக் குழு கூட்டத்தில் ஆக.,9 ல் சர்வதேச பழங்குடியினர் நாளாக ஆண்டு தோறும் அனுசரிக்கப்படும் என்று ஐநா அறிவித்துள்ளது.

உலகமெங்கும் உள்ள பழங்குடியினர் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களின் முன்னேற்றத்துக்காகவும் இந்த நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

உலகில் 90 நாடுகளில் 47 கோடி பழங்குடியினர் உள்ளனர்.

உலக மக்கள் தொகையில் 6 சதவீதமே இருந்தாலும் உலக ஏழைகளில் 15 சதவீதமாக உள்ளனர்.

7,000 மொழிகள், 5,000 கலாசாரத்தை பின்பற்றுகின்றனர்.

இவர்களது வசிப்பிடங்களில் 11 சதவீதம் காடுகள், இதனால் பல்லுயிரிகளின் காவலானக உள்ளனர்.

பழங்குடியின மகப்பேறு உதவியாளர்களை கவுரவித்தல் உயிர் நல்வாழ்வை பாதுகாத்தல், என்பது இந்தாண்டு மையக்கருத்து.