குடல் அழற்சி நோய் குறித்த விழிப்புணர்வு அவசியம்
குடல் அழற்சி நோயை பொறுத்தவரை பெருங்குடல், மலக்குடலை பாதிக்கும் 'அல்சரேட்டிவ் கோலிடிஸ்' மற்றும் செரிமானப் பாதையை பாதிக்கும், 'க்ரோன்ஸ்' என்ற 2 வகை பாதிப்புகள் உள்ளன.
ரத்த அழுத்தம், நீரிழிவு போல், இதுவும் ஒரு நீண்ட கால தொற்றாகும்.
ஒரு முறை இந்த நோயால் பாதிக்கப்பட்டால், வாழ்நாள் முழுதும் மருந்து எடுக்க வேண்டியது அவசியம்.
சில ஆண்டுகளாக, குடல் அழற்சி நோயின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்குக் அதிக பாதிப்புள்ளது.
இதற்கு, தவறான உணவு முறை, துரித உணவுகளை அதிகம் உண்பது, துாக்கமின்மை போன்றவை காரணம்.
துவக்க நிலையில் கண்டறிந்தால், மருந்துகள் வாயிலாக கட்டுப்படுத்தலாம். தீவிரமானால் மலக்குடலை முழுதுமாக அகற்ற நேரிடும். அப்படியேவிட்டால் புற்றுநோய் ஏற்படலாம்.
எனவே, குடல் அழற்சி நோய் குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியமானது என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.